ஏர்பஸ் நிறுவனத்திற்கான மானியங்கள் தொடர்பில் உலக வர்த்தக அமைப்பு தீர்ப்பு

ஏர்பஸ் விமான நிறுவனத்திற்கு அளிக்கப்படும் மானியங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் உள்ள சர்ச்சையில் உலக வர்த்தக அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தீர்ப்பளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை ADRIAN DENNIS/AFP/Getty Images
Image caption ஐரோப்பிய ஒன்றியம் ஏர்பஸ் நிறுவனத்திற்கு அளிக்கும் மானியங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.ஏர்பஸ் விமானத்தின் மாதிரி (கோப்புப்படம்)

ஐரோப்பிய ஒன்றியத்தின் 22 பில்லியன் டாலர் பணம் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் நிதியும் ஏர்பஸ் நிறுவனத்திற்கு நிதி அளிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்று உலக வார்த்தை அமைப்பு கண்டறிந்துள்ளது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ப்ரோமன் இந்த தீர்ப்பை பெரும் வெற்றி என்று விவரித்துள்ளார். ஒன்றியம் ஏர்பஸ் நிறுவனத்திற்கு அளிக்கும் மானியங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

ஐரோப்பிய ஒன்றியம் எந்தவித அபராதமும் விதிக்கப்படும் முன்பு, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.

தொடர்புடைய தலைப்புகள்