சிரியாவில் உதவி வாகனங்களை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு அதிபர் அசாத் மறுப்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிரியா அதிபர் பஷார் அல் அசாத்

அலெப்போவில், போராளிகள் பிடியில் இருக்கும் பகுதியை சிரியா அரசு முற்றுகையிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அதிபர் பஷார் அல் அசாத் மறுத்துள்ளார்.

ரசாயன ஆயுதங்களை தனது மக்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார், உதவி வாகனங்களை தாக்குகிறார் என்ற கூற்றச்சாட்டுகளை மறுத்த அவர் அவ்வாறு செய்வது பொது மக்களை பயங்கரவாதிகளின் கைகளில் ஒப்படைப்பதாகும் என்று சாடியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்குவதை அமெரிக்காவும், துருக்கியும் நிறுத்தினால் ஒரு மாதத்திற்குள் நாட்டில் வெளியேறியவர்களை மீண்டும் சிரியா அரசு அழைக்கும் என்று அசாத் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமையன்று அமெரிக்க வான் தாக்குதலால் 60 சிரியா சிப்பாய்கள் கொல்லப்பட்டது ஒரு விபத்து அல்ல என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, உதவி வழங்கும் பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துவிட்டது.

தொடர்புடைய தலைப்புகள்