கறுப்பின ஆடவர் கொலை: ஷார்லட் நகரில் நெருக்கடி நிலை பிரகடனம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கறுப்பின ஆடவர் கொலை: ஷார்லட் நகரில் நெருக்கடி நிலை பிரகடனம்

அமெரிக்காவின் வட கரோலைனா மாகாணத்திலுள்ள ஷார்லட் நகரில் கறுப்பினத்தவர் ஒரு கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை அங்கு கீத் லெமாண்ட் ஸ்காட் எனப்படும் கறுப்பின ஆடவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டத்தை அடுத்து வெடித்த வன்முறைகள் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தன.

நகரின் மேயர் ஜெனிஃபர் ராபர்ட்ஸ் அம்மையார் அனைவரையும் அமைதி காக்கும்படி கோரியுள்ளார்.

ஷார்லட் நகரில் கூடுதலாக காவல்துறையினரும், தேசியப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

கீத் லெமாண்ட் ஸ்காட்டின் கொலை, இங்குள்ள கறுப்பின மக்களின் துடிப்பை உசுப்பியுள்ளது. இதுவரை இங்குள்ள சமூகத்தில் நீருபூத்த நெருப்பாக இருந்த பிளவுகள் இப்போது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளன.