500 மில்லியன் கணக்குகள் ஊடுருவப்பட்ட சர்ச்சையில் யாஹூ நிறுவனம்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption யாஹூ நிறுவனம்

இணைய பெரு நிறுவனமான யாஹூவின் 500 மில்லியன் பயன்பாட்டாளர்களின் கணக்குகள் ஊடுருவப்பட்டதை (ஹேக் செய்யப்பட்டதை) கவனிக்க ஏன் இரு ஆண்டுகள் தேவைப்பட்டது என்று விளக்க வேண்டி அந்நிறுவனம் கடும் அழுத்தங்களை சந்தித்து வருகிறது.

உலகிலே மிகப்பெரிய இணைய உலக மீறலாக கருதப்படும் இந்த தாக்குதலை நடத்தியவர்கள் அரசாங்கங்களின் ஆதரவை பெற்றவர்கள் என்பதை நம்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த சம்பவத்தை அப்போது அந்நிறுவனம் கண்டறியாமல் போனதற்கு அமெரிக்க செனட் சபையின் இணைய பாதுகாப்பு குழுவை சேர்ந்த உறுப்பினர் மார்க் வார்னர் யாஹூவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருடப்பட்ட தகவல்களில் தனிப்பட்ட தகவல்களின் பகுதிகளும் அடங்கும் என்றும், ஆனால் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்படவில்லை என்றும் யாஹூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்