ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் மீது எஃப்.பி.ஐ விசாரணை?

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆஞ்சிலீனா ஜோலி மற்றும் பிராட் பிட்

கடந்த வாரம் ஒரு தனி ஜெட் விமானத்தில், ஹாலிவுட் நடிகரான பிராட் பிட் மற்றும் அவரது குழந்தைகள் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்த தகவல்களை சேகரித்து வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

இது குறித்த விசாரணை நடவடிக்கைகளை தொடங்கலாமா என்பதை இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை அன்று, பிராட் பிட்டின் மனைவி நடிகை ஆஞ்ஜெலீனா ஜோலி, தீர்க்கமுடியாத கருத்து வேறுபாடுகளை குறிப்பிட்டு விவாகரத்து கோரியிருந்தார்.

தங்களுடைய 6 குழந்தைகளுக்கும் தன்னிடமே வைத்துக்கொள்ளும் உரிமை கோரியிருக்கிறார் ஆஞ்ஜெலீனா ஜோலி.