அலெப்போவில் புதிய தாக்குதலுக்கு தயாராகும் சிரியா ராணுவம்

அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளை மீட்க சிரியா ராணுவம் புதிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

Image caption சிதைந்துபோன அலெப்போ

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், சுமார் 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எங்கும் தாக்குதல்

போராளிக் குழுக்கள் உள்ள பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை சிரியா ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

தாக்குதல் நடக்கும்போது, தப்புவதற்கு ஏதுவாக வெளியேறும் வழிகள் திறந்துவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள கிழக்கு அலெப்போ நகரில் கடுமையான தாக்குதல்களுக்குப் பிறகு ராணுவத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.