கறுப்பர் சுட்டுக் கொலை சம்பவம்: அமெரிக்க நகரில் எதிர்ப்புகள் ஓய்ந்தன

அமெரிக்காவின் ஷார்லோட் நகரில் கறுப்பின ஆண் ஒருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஓய்ந்த நிலையில், இரண்டு இரவுகளாக ஏற்பட்ட வன்செயல்களை அடுத்து அங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை போலிசார் இப்போது அமல்படுத்தவில்லை.

நேற்று நள்ளிரவுக்குப் பிறகும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன .

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கறுப்பின ஆண் போலிசாரல் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிராக , நள்ளிரவில் ஷார்லோட்டில் நகரில் நடந்த போராட்டங்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த கறுப்பின நபரை போலிசார் சுட்ட காணொளிக் காட்சியை வெளியிடுமாறு தொடரந்து கோரினர்.

போலிசார் அந்த காணொளி காட்சியை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் காட்டியதாகவும், பொதுவெளியில் அதை வெளியிட திட்டங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கறுப்பின ஆண் போலிசாரல் சுட்டுக்கொல்லப்பட்டதற்குஎதிராக ஷார்லோட்டில் நகரில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்.

ஷார்லோட் காவல் துறை, வியாழனன்று நடந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை என்றும் ஆனால், போராட்டக்காரர்கள் ரசாயனத்தைத் தெளித்ததை அடுத்து, இரண்டு காவல் துறை அதிகாரிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.