அமெரிக்கா மற்றும் கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள்: ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் விவாதம்

ஸ்லோவாக்கியாவின் தலைநகர் ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவுடன் சர்ச்சைக்குரிய முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக சந்திக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை VLADIMIR SIMICEK/AFP/Getty Images)
Image caption ஸ்லோவாக்கியாவின் தலைநகர் ப்ரேடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள், அமெரிக்கா மற்றும் கனடாவுடன் சர்ச்சைக்குரிய முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக சந்திக்கிறார்கள். சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் சந்திப்பு நடந்தபோது எடுத்த படம்(கோப்புப்படம்)

அமெரிக்காவுடனான அட்லாண்டிக் வர்த்தக முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் கனடாவுடனான பரந்த பொருளாதார வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை ஐரோப்பிய அரசியல்வாதிகள் மற்றும் போராட்டக்கார்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பை எதிர்கொள்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் செசிலியா மாம்ஸ்ட்ராம் வந்தபோது அவர் இந்த பேச்சுவார்த்தை மிக கடினமானது என்றும் ஒரு விரைவான முடிவை அடைவதற்கான சாத்தியம் குறைவு என்றும் தெரிவித்தார்.

ஆனால் அவர் இந்த பேச்சுவார்த்தையில், முடிந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த முயல்வதே சரியானதாகும் என்றார்.

தொடர்புடைய தலைப்புகள்