ஜப்பான் பேரரசர் அக்கிஹிட்டோ பதவி விலகும் சாத்தியங்களைக் கண்டறிய நிபுணர்கள் குழு அமைப்பு

ஜப்பானியப் பேரரசர் அக்கிஹிட்டோ தனது பதவியில் இருந்து விலகுவது குறித்த சாத்தியங்களை கண்டறிய ஜப்பான் அரசாங்கம் நிபுணர்களின் குழுவொன்றை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை JAY DIRECTO/AFP/Getty Images)
Image caption ஜப்பான் அரசர் அக்கிஹிட்டோ (கோப்புப்படம்)

மன்னர் அக்கிஹிட்டோ கடந்த மாதம், தான் பதவியில் இருந்து விலகுவதற்கு விரும்புவதாக குறிப்பிட்டார். அவருக்கு 82 வயது மற்றும் அவர் உடல் நலம் சரியில்லாமல் அவதியுற்று வருகிறார். ஆனால் அவர் பதவி விலக புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

புதிதாக தொடங்கப்பட்ட குழு தனது திட்டங்களை முன்வைப்பதற்கு முன்னதாக, மக்களின் கருத்தை கேட்டறியும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மன்னரின் விருப்பமான தனது பதவியில் இருந்து விலகுவதற்கு, ஆதரவு இருப்பதாக கருத்துக் கணிப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் பல பழமைவாதிகள் இந்த திட்டத்தை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள்.