ஒற்றை சந்தையில் பிரிட்டனை அனுமதிக்க பேச்சுவார்த்தை: ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் தகவல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும்போது, ஒன்றியத்திலிருந்து பிரிட்டனிற்குள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ஒற்றை சந்தையில் பிரிட்டனை அனுமதிக்க சமரச தீர்வு ஒன்றை காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவது சாத்தியமாக இருக்கலாம் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் மார்டீன் ஷூல்ஸ் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவர் மார்டீன் ஷூல்ஸ்

சிக்கலான பிரச்சினைகளுக்கு நடைமுறைக்கேற்ற தீர்வுகளே தேவை என்றார் மார்டின் ஷூல்ஸ்.

ஆனால், பிரிட்டனுக்கு, ஒற்றைச் சந்தையை அணுகும் வசதி கிடைக்கவேண்டும், அதே போல ஒன்றியத்திலிருந்து பிரிட்டனுக்குள் மக்கள் தங்கு தடையின்றி வருவதற்கு அனுமதி என்ற விஷயத்துக்கு பிரிட்டன் உடன்படவேண்டும் என்ற இரு விஷயங்களில் ஒன்று இல்லாமல் மற்றொன்று மட்டும் பிரிட்டனுக்குக் கிடைப்பது சாத்தியமற்றது என்று முன்னர் ஐரோப்பிய அதிகாரிகள் வலியுறுத்தி இருந்தனர்.

லண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸ் இடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படும் என்று ஷூல்ஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்