சிரியா யுத்த நிறுத்தத்தை ரஷ்யா மட்டுமே தீர்மானிக்க முடியாது என அமைச்சர் கருத்து

சிரியாவில் யுத்த நிறுத்தத்தை மீண்டும் புதுப்பிப்பது என்பது ரஷ்யா மட்டும் வழங்கக்கூடிய ஒரு தலைப்பட்சமான சலுகைகளை சார்ந்ததல்ல என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லேவ்ராவ் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லேவ்ராவ்

இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரும் ஈடுபடக்கூடிய கூட்டு முயற்சி ஒன்று வேண்டும் என்று லேவ்ராவ் தெரிவித்துள்ளார்.

அல் கயிதா தீவிரவாத வலையமைப்புடன் தொடர்பில் உள்ள போராளிகளிடமிருந்து சிரியாவின் மிதவாத எதிர்ப்பு குழுக்கள் பிரிந்து வர வேண்டும் என்று ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் லேவ்ராவ் வலியுறுத்தி பேசினார்.

தொடர்புடைய தலைப்புகள்