சீனாவில் தொலைக்காட்சி பிரபலங்களை மிகைப்படுத்த கூடாது என கட்டுப்பாடு விதிப்பு

சீனாவில் தொலைக்காட்சி ஒழுங்குபடுத்தும் அமைப்பு, ஒளிபரப்பாளர்கள் தொலைக்காட்சி பிரபலங்களை அளவுக்கதிகமாக மிகைப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. சீன மக்கள் எந்த வகையான நிகழ்ச்சிகளைப் பார்க்கவேண்டும் என்று கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதில் இந்த நடவடிக்கை மிகச்சமீபத்திய ஒன்றாகும்.

படத்தின் காப்புரிமை GREG BAKER/AFP/Getty Images
Image caption சீன மக்கள் எந்த வகையான நிகழ்ச்சிகளைப் பார்க்கவேண்டும் என்று கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.(கோப்புப்படம்)

தொலைக்காட்சி நிறுவனங்கள் மிகவும் பிரபலமான கலைஞர்களுக்கு அதிக விலை செலுத்துவதை இந்தக் கட்டுப்பாட்டு நிறுவனம் விமர்சித்துள்ளது.

இதற்கு பதிலாக, நிகழ்ச்சியின் கலை பாணி, தயாரிப்பு தரம் மற்றும் சித்தாந்த ரீதியான செய்தி ஆகிவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.

பிரபல நட்சத்திரங்களை ஏதோ மிகப்பெரியவர்கள் போல உயர் பீடத்தில் வைத்து நடத்துவது, மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பரபரப்பாக்குவது போன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சமீபத்தில் சீன அதிகாரிகள், ஒளிபரப்பாளர்களிடம் கூறியுள்ளனர்.