உகாண்டாவில் ஒரு பால் உறவினர் கொண்டாட்ட நிகழ்வு நிறுத்தம்

உகாண்டாவில் போலிஸ் அதிகாரிகள் ஒரு பால் உறவுக்காரர்கள் நடத்தும் 'கே பிரைட்' என்ற கொண்டாட்ட நிகழ்ச்சியை கலைத்தனர்.

படத்தின் காப்புரிமை ISAAC KASAMANI/AFP/Getty Images
Image caption உகாண்டாவில் 2015ல் ஒரு பால் உறவுக்காரர்கள் நடத்திய 'கே பிரைட்' என்ற கொண்டாட்ட நிகழ்வு (கோப்புப்படம்)

என்டெபி நகரத்தில் உள்ள ஒரு கடற்கரை உல்லாச வாசத்தலத்துக்கு செல்ல முயன்ற டஜன் கணக்கான மக்கள் துரத்தியடிக்கப்பட்டனர்.

அவர்கள் அந்த நிகழ்வை மீண்டும், லேக் விக்டோரியா என்ற இடத்தில் நடத்த முயன்ற போது, போலிஸ் மீண்டும் அவர்களை வெளியேற்றியது.

அதிகாரிகள் பின்னர், தலைநகர் கம்பாலாவை நோக்கி ஐந்து பேருந்துகளை பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

உகாண்டாவின் நெறிமுறைகள் மற்றும் ஒழுக்கத்திற்கான அமைச்சர், சைமன் லோகோடோ, கடந்த மாதம் தான், எந்த விதமான 'கே பிரைட்' என்ற கொண்டாட்ட நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்தப் போவதாக தெரிவித்திருந்தார்.

உகாண்டாவில் ஒரு பாலுறவு சட்டவிரோதமானது.