நீஜேரில் தொற்று ஏற்படுத்தும் ரிப்ட் வேலி காய்ச்சலுக்கு 23 பேர் பலி

ரிப்ட் வேலி காய்ச்சல் என்ற மிகுந்த அளவில் தொற்று ஏற்படுத்தும் ஒரு வைரஸ் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்ட சமூகங்களி்டையே பணி செய்ய நீஜேர் செஞ்சிலுவைச் சங்கம் 60 தன்னார்வ தொண்டர்களை திரட்டியுள்ளது.

படத்தின் காப்புரிமை ISSOUF SANOGO/AFP/Getty Images
Image caption ரிப்ட் வேலி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் கால்நடை மேய்ப்பவர்கள் என்று நீஜேர் அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் பிற்பகுதியிலிருந்து, 23 பேர் இறந்து விட்டார்கள் என்றும் 60 பேருக்கு இந்த நோய் தொற்றியுள்ளது என்றும் நீஜேர் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் கால்நடை மேய்ப்பவர்கள்.

ஏராளமான மாடுகள், ஆடுகள் மற்றும் ஒட்டகங்களும் இந்த நோயால் இறந்துள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ரிப்ட் வேலி காய்ச்சல் கொசு கடித்தால் அல்லது அசுத்தமான விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. அது கண்பார்வையை இழக்கச் செய்யும் மற்றும் கடுமையான இரத்தப் போக்கை ஏற்படுத்தும்.