சிரிய அரச படையினர் அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் பலமாக உள்ள பகுதியை கைப்பற்றியதாக தகவல்

ரஷியாவின் ஆதரவுடன் அலெப்போ நகரில் பெரிய அளவில் தாக்குதல் நடத்திவரும் சிரிய அரச படையினர், கிளர்ச்சியாளர்கள் பலமாக உள்ள பகுதி ஒன்றை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AMEER ALHALBI/AFP/Getty Images

'ஹன்டாரட்' முகாம் என்ற அழைக்கப்படும் பகுதி, வடக்கில் இருந்து வரும் ஒரு வழியை மேலிருந்து பார்க்கவல்ல கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மேட்டுப்பாங்கான தளத்தில் அமைந்துள்ளது.

இதற்கிடையில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள அலெப்போவின் சுற்றுப்புறங்களில் பலத்த வான்வாழி தாக்குதல்கள் தொடர்கின்றன.

தாக்குதல்கள் தாறுமாறாக நடத்தப்பட்டுள்ளன என்றும் , பெரும் எண்ணிக்கையில் மக்கள் இடிந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷிய போர்விமானங்களால் பெரும்பாலான வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.