தான் கொல்லப்படவில்லை என போக்கோ ஹரம் தலைவர் கூறும் காணொளி வெளியீடு

கடந்த மாதம் நடந்த வான் வழி தாக்குதலில் தான் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது மிக மோசமாக காயமடைந்தது இருக்கலாம் என்று நைஜீரிய ராணுவம் வெளியியிட்ட கூற்றினை மறுத்து நைஜீரியாவின் போகோ ஹரம் இஸ்லாமியவாதக் குழுவின் சர்ச்சைக்குரிய தலைவரான அபுபக்கர் ஷெகாவ் காணொளி பதிவு தகவலையொன்றை வெளியிட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption அபுபக்கர் ஷெகாவ்

அபுபக்கர் ஷெகாவ் ஆரோக்கியமாக தோன்றும் இந்த காணொளி பதிவில், அவர் அரபு, ஹவ்சா மற்றும் கனூரி ஆகிய மொழிகளில் உரையாற்றுகிறார்.

இந்த வீடியோ எப்போது பதிவு செய்யப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த காணொளி பதிவு குறித்து இது வரை நைஜீரிய ராணுவம் எந்த கருத்தும் கூறவில்லை.

தொடர்புடைய தலைப்புகள்