"சிரியா போரை நிறுத்த ரஷியா மற்றும் அமெரிக்கா தலைமைத்துவத்தை காட்ட வேண்டும்"

அலெப்போவைச் சுற்றி வெடித்துள்ள போரை நிறுத்துவதற்காக, ரஷியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் தலைமைத்துவத்தை காட்டுமாறு சிரியாவிற்கான ஐ.நாவின் சிறப்பு தூதர் ஜான் ஈக்லாண்ட் வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜான் ஈக்லாண்ட் (கோப்புப் படம்)

உதவி வாகனங்கள் உள்ளே வருவதற்கு வழிசெய்யும் வகையில், நகரில் போராளிகளின் பிடியில் இருக்கும் பகுதியில் பொது மக்கள் மீது குண்டுதாக்குதல்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ரஷியாவால் மத்தியஸ்தம் செய்து வைக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததையடுத்து சிரியா மற்றும் ரஷிய போர் விமானங்களின் வான் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

பலர் இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்டெடுக்க போதிய அளவில் மீட்புப் பணியாளர்கள் இல்லை எனவும், அங்கு மிகவும் மோசமான நிலைமை நிலவுவதாகவும் உதவி பணியாளார்கள் தெரிவிக்கின்றனர்.

அலெப்போ நெருக்கடி குறித்து ஐ.நா.,வின் பாதுகாப்பு கவுன்சில் இன்று பின்னதாக ஆலோசிக்க உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்