நீதிமன்ற தீர்ப்பை மீறி போஸ்னிய செர்பியாவில் கருத்தறியும் வாக்கெடுப்பு

போஸ்னியாவில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி ஜனவரி 9 ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டுமா என்பது குறித்து, போஸ்னிய செர்பியர்கள் வாக்களித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption போஸ்னியாவின் அரசியலைப்பு நீதிமன்ற தடையை மீறி இந்த வாக்கெடுப்பு நடைபெறுகிறது

இந்த தேதி போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் கத்தோலிக்க க்ரோஷியர்களுக்கு எதிராக பாரபட்ச நிலையை உருவாக்கிறது; எனவே இது கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜனவரி 9, 1992 ஆம் தேதிதான், செர்பியர்கள் போஸ்னியாவில் தங்களுக்கான ஒரு நாடு உருவானதாக அறிவித்தனர்; அது அங்கு இனக் கலவரம் ஏற்பட்டு சுமார் 100,000 பேர் கொல்லப்படுவதற்கான தூண்டுதலாக இருந்தது.

போஸ்னியா, இன்னும், செர்பிய பெரும்பான்மை பெற்ற மாகாணமான, ரிப்பளிக்கா ஸ்ருப்ஸ்கா மற்றும் ஒரு முஸ்லிம் க்ரோஷிய கூட்டமைப்பு ஆகிய இரு பகுதிகளாக இன ரீதியாக பிளவுண்டு கிடக்கின்றது.