பல தசாப்தங்களுக்கு பிறகு அல்ஜீரியர்கள் புறக்கணிப்பை அங்கீகரித்த பிரான்ஸ் அரசு

1962 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த, 8 ஆண்டுகளாக நடந்த, அல்ஜீரியா சுதந்திர போரின் போது, பிரெஞ்சு தரப்புக்கு ஆதரவாக சண்டையிட்ட அல்ஜீரியர்கள் புறக்கணிக்கப்பட்டதை பிரான்ஸ் முதற்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து

அல்ஜீரியாவிலிருந்து பிரெஞ்சு படையினர் பின்வாங்கியதை தொடர்ந்து, 'ஹர்கிஸ்' என்றழைக்கப்பட்ட அல்ஜீரிய தன்னார்வலர்கள் பல்லாயிரக்கணக்கானோர் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

அங்கிருந்து தப்பி பிரான்ஸிற்கு திரும்பியவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டனர்.

தன்னார்வலர்களுக்கு அஞ்சலி செலுத்த நடத்தப்பட்ட ஒரு தேசிய நாளை குறிக்கும் விதமாக, பாரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து, தன்னார்வலர்கள் நடத்தப்பட்ட விதத்திற்கு பிரான்ஸ் குற்றவாளி என்று தெரிவித்துள்ளார்.

தன்னார்வலர்களின் சந்ததியினர் தங்கள் முன்னோர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் வேண்டி நீண்ட காலமாக முயற்சித்து வந்தது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய தலைப்புகள்