கொலம்பியா போர் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப விதிவிலக்கு அளிக்கப்படாது: சாண்டோஸ்

ஃபார்க் போராளிகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட தயாராகவுள்ள கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் , கடந்த 50 ஆண்டுகளாக நடந்த போரில், அத்துமீறல்கள் புரிந்தவர்களுக்கு, அவர்கள் தண்டனையில் இருந்து தப்புவதற்கு எந்த விதிவிலக்கும் அளிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

Image caption கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ்

''அமைதியை விட போர் எப்போதுமே செலவு மிகுந்த அம்சமாகும் '' என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் கூறினார்.

கொலம்பிய அதிபர் யுவான் மானுவேல் சாண்டோஸ் மற்றும் டிமோசென்கோ என்றழைக்கப்படும் ஃபார்க் குழுவின் தலைவர் டிமோலியோன் ஜிம்மேனேஸ் ஆகிய இருவரும், இன்று ( திங்கள் கிழமை) பின்னதாக சிறப்பு வாய்ந்த அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஃபார்க் போராளிகள் (கோப்புப் படம்)

இந்த இரு தலைவர்களுக்கும் இடையே நடக்கவுள்ள அமைதி ஒப்பந்த கையெழுத்து நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்கள் அமைதியை குறிக்கும் அடையாளமாக வெண்ணிற ஆடைகளை அணிந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விருந்தினர்களில் பல லத்தீன் அமெரிக்க நாட்டு தலைவர்களும் அடங்குவர்.

தொடர்புடைய தலைப்புகள்