முன்னாள் அதிபர் அஹமதிநெஜத் தேர்தலில் போட்டியிட கூடாது என அயதுல்லா கமனே உத்தரவு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் இரானின் முன்னாள் அதிபர் முஹமத் அஹமதிநெஜத் போட்டியிட கூடாது என்று இரானில் உள்ள அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமனே தெரிவித்துள்ளதாக இரானிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரானின் முன்னாள் அதிபர் முஹமத் அஹமதிநெஜத்

அஹமதிநிஜாத் போட்டியிடுவது, அவர் நலனுக்கு அல்லது நாட்டின் நலனுக்கோ உகந்த்து அல்ல என்று அவரிடம் கமனே கூறியதாகக் கூறப்படுகிறது. இது அஹமதிநிஜாத்தை தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாத ஒரு நிலையை ஏற்படுத்திவிட்டது.

2009 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய வகையில் தேர்தலில் இரண்டாவது முறையாக வென்றது, பெரிய அளவிலான போராட்டங்களைத் தூண்டியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அயதுல்லா அலி கமனே

ஆனால், அஹமதிநிஜாத் போட்டியிடுவதுதான், கடும்போக்கு பழமைவாதிகள் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக் கிடைக்கும் ஒரே ஒரு சாத்தியக்கூறான சிறந்த வாய்ப்பாகப் பார்க்கப்பட்டது.

அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் அஹமதிநெஜத் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், அவரது சமீபத்திய பேச்சுக்களில் அதனை மறைமுகமாக கூறி இருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்