பிரான்ஸில் குடியேறிகள் நெருக்கடியை கையாள பிரிட்டனுக்கு ஒல்லாந்து அழைப்பு

பிரான்ஸின் வடக்கு பகுதியில் நிலவும் குடியேறிகள் நெருக்கடியை கையாள்வதில் பிரிட்டன் தனது பங்கை அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்து வலியுறுத்தியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கலெய் துறைமுகத்தில் ஒல்லாந்த்

கலெய் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் வாக்களித்துள்ளதால் மட்டும், பிரான்ஸிற்கான அதன் கடமைகளிலிருந்து பிரிட்டன் விடுபட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

குடியேறிகள் டிரக்குகளில் ரகசிய பயணம் மேற்கொள்வதை தடுக்க, பிரிட்டனின் நிதி உதவியுடன், முக்கிய சாலையில், சுவர் எழுப்பும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது.

ஜங்கிள் என்று அழைக்கப்படும் கலெய்யின் மிகப்பெரிய குடியேறிகள் முகாமை மூடுவதாக தான் தெரிவித்ததை ஒல்லாந்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் குறித்த பிரிட்டனின் வாக்கெடுப்பில் குடியேறிகளை கட்டுப்படுத்துவது ஒரு முக்கிய அம்சமாக இருந்தது.

தொடர்புடைய தலைப்புகள்