ஹிலரி - ட்ரம்ப் இடையேயான முதல் தொலைக்காட்சி விவாதத்தில் கடும் மோதல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டனுக்கும், டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே நடந்த முதல் தொலைக்காட்சி விவாதத்தில் அவர்கள் கடுமையான கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹிலரிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையேயான தொலைக்காட்சி விவாதம்

பொருளாதாரம், வரி விதிப்பு, இன உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் குறித்து இந்த 90 நிமிட நேரம் நடந்த ஒளிபரப்பில் விவாதிக்கப்பட்டது.

ஹிலரி கிளிண்டன் அரசில் பதவி வகித்த போது நாட்டின் பிரச்சனைகளில் பலவற்றுக்கு அவரே காரணமாக இருந்தார் என்று அவரை தொலைக்காட்சி விவாதத்தின் போது பலமுறை இடைமறித்த டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஹிலரிக்கும், ட்ரம்ப்புக்கும் இடையேயான தொலைக்காட்சி விவாதம்

மேலும், அமெரிக்க அதிபராக பதவி வகிக்கத் தேவையான பலம் ஹிலரிக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

டொனால்ட் ட்ரம்ப் அவருடையே கனவுலகிலேயே வாழ்கிறார் என்றும் அவர் அவருடைய வருமான வரி கணக்கு விஷயத்தில் வெளியிடாமல் மறைக்கிறார் என்றும் ஹிலரி குற்றம் சாட்டினார்.

ஆனால் டொனால்ட் ட்ரம்ப் ,ஹிலரி கிளிண்டன் வெளியுறவுச் செயலராக இருந்த காலத்தில் அனுப்பிய 30,000க்கும் மேற்பட்ட மின்ன்ஞ்சல்களை வெளியிட்ட உடன், தான் தனது வருமான வரி கணக்குகளை வெளியிடுவேன் என்றார்.

இந்த தொலைக்காட்சி விவாதத்தை 10 கோடி பேருக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கக் கூடும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்