ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரில் மசூதி, மாநாட்டு மையம் மீது இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்

ஜெர்மனியின் கிழக்கு நகரான ட்ரெஸ்டனில் நடத்த இரண்டு குண்டு தாக்குதல் சம்பவங்களில் ஒரு சர்வதேச மாநாட்டு மையமும், ஒரு பள்ளிவாசலும் இலக்கு வைக்கப்பட்டன என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை ARNO BURGI/AFP/Getty Images
Image caption ஜெர்மனியின் ட்ரெஸ்டன் நகரத்தில் குண்டு தாக்குதல் நடந்த சர்வதேச மாநாட்டு மையத்தின் ஒரு பகுதி

திங்களன்று நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை .

இந்த தாக்குதலை நடத்தியதாக இது வரை யாரும் பொறுப்பு கோரவில்லை மற்றும் இனவாதம் இந்த தாக்குதல்களின் நோக்கமாக தெரிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ட்ரெஸ்டனில் உள்ள பள்ளிவாசல்களின் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.