மத்திய நேபாளத்தில் பேருந்து விபத்தில் 18 பேர் பலி

மத்திய நேபாளத்தில் ஏற்பட்ட ஒரு பேருந்து விபத்தில் 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

படத்தின் காப்புரிமை PRAKASH MATHEMA/AFP/Getty Images
Image caption நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போகிறார்கள். (கோப்புப்படம்)

வளைவுகள் நிறைந்த மலைப்பாதையில் ஏறுவதற்குப் போராடிய போது, அந்தப் பேருந்து, சாலையில் இருந்து 200 மீட்டர் ஆழத்தில் விழுந்தது என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் சிலர், கடந்த ஆண்டு நேபாளத்தில் நடந்த பேரழிவு ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் உயிர்பிழைத்தவர்கள். அவர்கள் தங்களது பழுதடைந்த வீடுகளை மீண்டும் கட்டுவதற்காக அரசு அளிக்கும் மானியத்தைப் பெறுவதற்காக சென்று கொண்டிரந்தார்கள் என்று செய்திகள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்து போகிறார்கள். மோசமான சாலைகள், மோசமாக வண்டியை ஓட்டுவது மற்றும் அளவுக்கு அதிகப் பயணிகள் நிறந்த வாகனங்களும் இது போன்ற இறப்புகளுக்கு ஒரு காரணம்.