பாக்தாத்தில் நடந்த குண்டு தாக்குதல்களில் 17 பேர் பலி, 50க்கும் மேற்பட்டவர்கள் காயம்

இராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த குண்டு தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை SABAH ARAR/AFP/Getty Images
Image caption இராக் பாதுகாப்பு படையினர் குண்டு தாக்குதல் நடந்த பாக்தாத் நகரத்தில் பணியில் ஈடுபட்டுள்ள காட்சி

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு ஒரு தாக்குதல் சம்பவத்திற்குப் பொறுப்பேற்றுள்ளது. அந்த தாக்குதலில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பாக்தாத் அஜ் -ஜடீடா மாவட்டத்தில், தங்களது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளில் ஒருவர் தன்னைத் தானே வெடிக்க செய்து குறைந்தது எட்டு பேரை கொன்றதாக அது தெரிவித்துள்ளது.

மற்றொரு தற்கொலை குண்டுதாரி பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள பாயா பகுதியை இலக்கு வைத்துக் குறைந்தது ஒன்பது நபர்களை கொன்றார் .

ஐ.எஸ். அமைப்பினர் இராக்கின் மற்ற பிரதேசங்களில் தங்களது கட்டுப்பாட்டை இழந்து வரும் நிலையில், இந்த ஆண்டு தலைநகரில் பெரிய எண்ணிக்கையில் இது போன்ற தாக்குதல்களை நடத்திவருகின்றனர். .