நிராயுதபாணிகளைக் கொன்ற மெக்ஸிகோ ராணுவம்: உறுதி செய்தது மனித உரிமை ஆணையம்

மெக்ஸிகோவில், 2012 ல் ஒரு கொண்டாட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக ஆறு பொதுமக்களை அரச படையினர் வெளியேற்றி அவர்களை கொலை செய்தனர் என்று அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Pedro PARDO/AFP/Getty Images
Image caption மெக்ஸிகோ அரச படையினர் (கோப்புப்படம்)

20 படையினர் இரண்டு இளைஞர்களையும், நான்கு பெரியவர்களையும் தெற்கு மாநிலமான குவெரெரோவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களை சுட்டுக்கொன்றனர் என்று ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 6 நபர்களும், ஒரு மோதல் காரணமாகத்தான் கொல்லப்பட்டனர் என்று அவர்கள் இறந்த போது அந்நாட்டு ராணுவம் கூறியிருந்தது.

ஆனால் மெக்ஸிக்கோவின் மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்டவர்கள் நிராயுதபாணியாக இருந்தனர், அவர்கள் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர், மற்றும் அவர்கள் எந்த வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்று முடிவு செய்தது.

தொடர்புடைய தலைப்புகள்