உலக சுகாதார நிறுவனம்: அலெப்போவில் மக்களை வெளியேற்ற பாதைகள் அமைக்க வேண்டும்

சிரியாவின் அலெப்போ நகரிலிருந்து காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளை வெளியேற்ற பாதைகளை உடனடியாக அமைக்குமாறு உலக சுகாதார நிறுவனம் கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

போராளிகளின் பிடியில் இருக்கும் அலொப்போ நகரின் கிழக்கு பகுதியில் உள்ளதாக மதிப்பிடப்பட்ட 2.5 லட்சம் மக்களுக்கு சிகிச்சையளிக்க 35 மருத்துவர்கள் மட்டுமே எஞ்சி இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு வாரம் கடைப்பிடிக்கப்பட்ட போர் நிறுத்தம் தடுமாற்றத்தில் முடிந்ததையடுத்து, அரச கட்டுப்பாட்டுப் பகுதி மற்றும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்று பிரிந்து கிடக்கும் நகரில், போராளிகள் பிடியில் இருக்கும் மாவட்டத்தில் ரஷியா ஆதரவு பெற்ற சிரிய அரசின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.