ஐரோப்பிய ஒன்றிய ராணுவம் என்ற யோசனையை பிரிட்டன் ஏற்காது

ஐரோப்பிய ஒன்றிய ராணுவம் என்ற யோசனையை எதிர்ப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது; பிராட்டிஸ்லாவாவில் நெருக்கமான ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்க அழைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பில் பிரிட்டன் இவ்வாறு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

அம்மாதிரியான படைகள் நேட்டோவை வலுவிழக்கச் செய்யும் என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கெல் ஃபாலோன் தெரிவித்துள்ளா

ஆனால் சந்திப்பில் கலந்து கொண்ட நேடோவின் பொதுச் செயலர் யென்ஸ் ஸ்டோல்ஸ்டன்பேக் வலுவான ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் வலுவான நேடோவிற்கும் எந்த முரண்பாடும் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் விலகுவதால் நெருக்கமான ராணுவ கூட்டணிக்கான முயற்சியை அது எளிதாக்கும் என ஐரோப்பிய ஒன்றிய ராணுவ நடவடிக்கையை ஆதரிக்கும் நாடுகளான ஃபிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நம்பியிருந்தன.

ஐரோப்பிய சிப்பாய்கள் ஒரே மாதிரியான சீருடை அணிவதற்கான திட்டங்கள் ஏதும் இல்லை என பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.ர்.