நேருக்கு நேர் மோதிய அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின், முதல் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்டு ட்ரம்பின் செயல்பாடுகளை இருதரப்பு பிரச்சார அணியினரும் பாராட்டியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த போட்டியாளர்களான அவர்கள், தங்களது தகுதி குறித்த 90 நிமிட வாக்குவாதத்தில் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசினர்.

ஹிலரி கிளிண்டன் அழுகிப்போன அரசியல் அமைப்பின் உறுப்பினர் என ட்ரம்ப் குற்றம் சுமத்தினார்.

தனது போட்டியாளரான ட்ரம்ப், டிவிட்டரில் வெளியாகும் ஒரு கருத்தை பார்த்து உணர்ச்சி வசப்படக்கூடியவர் என்றும் அணு ஆயுதங்களை ஏவ அதிபருக்கு தரப்படும் சங்கேதக் குறியீடுகளுக்கு அருகே கூட அவர் அனுமதிக்கப்படக்கூடாது என்றும் கிளிண்டன் தெரிவித்துள்ளார்.