கிழக்கு தைவானை தாக்கியுள்ள சூறாவளியால் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

கிழக்கு தைவானை தாக்கியுள்ள சக்தி வாய்ந்த சூறாவளி, ஆயிரக்கணக்கான மக்களை அவர்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை SAM/ GETTY
Image caption 'மெகி' சூறாவளியால் உருவான வெள்ளப்பெருக்கு

'மெகி' எனப்படும் இந்த சூறாவளியால் கிழக்கு தைவானில் உருவான வன் காற்று மற்றும் அதி பயங்கர மழையால் 50-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.

பல் நூற்றுக்கணக்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இந்த இயற்கை சீற்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், ரயில்கள் மற்றும் படகுகள் ஆகியவை தங்கள் பயணத்தை தொடர முடியாமல் ஆங்காங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

படத்தின் காப்புரிமை SAM/ GETTY IMAGES
Image caption சூறாவளியால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு

குறைந்தது, 20 லட்சம் வீடுகள் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களில், தைவான் சந்திக்கும் மூன்றாவது மிகப் பெரிய புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்