மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏவுணை ரஷ்யாவிலிருந்து கொண்டு வரப்பட்டதா?

கடந்த 2014-இல் கிழக்கு யுக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமான சேவை விமானம் குறித்து விசாரணை செய்து வரும் சர்வதேச விசாரணை குழுவினர், விமானத்தை வீழ்த்திய ஏவுகணை, ரஷ்ய ஆதரவு போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு ஏவு தளத்திலிருந்து ஏவப்பட்டதாக தெரிவித்தனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் குறித்து விசாரணை செய்து வரும் சர்வதேச விசாரணை குழுவினர்

தங்கள் விசாரணையின் ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புகளை நெதர்லாந்தில் வெளியிட்ட இந்த குழு, பெர்வோமாய்ஸ்கி என்ற கிராமத்தின் அருகேயுள்ள குறிப்பிட்ட திடலை இந்த ஏவுகணை ஏவப்பட்ட தளமாக சுட்டிக்காட்டியது.

ரஷ்ய தயாரிப்பான பி.யு.கே (புக்) ஏவுகணைகள், ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும், அதற்கு அடுத்த நாள் ஏவுகணையை இயக்கும் வாகனம் அங்கிருந்து ரஷ்யாவுக்கு திரும்பியுள்ளது என்று விசாரணை குழுவினர் மேலும் தெரிவித்தனர்.

ஆனால், இந்த விமானம் வீழ்த்தப்பட்டதில் தங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டினை யுக்ரைன் போராளிகள் மீண்டும் மறுத்துள்ளனர். இதே போன்று இக்கூற்றுகளை எதிர்த்து ரஷ்யாவும் வாதிட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணம் செய்த சுமார் 300 பயணிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் ஹாலந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

தொடர்புடைய தலைப்புகள்