அதிக பாதுகாப்பு அரண்களை தாண்டி தென் கொரியாவுக்குள் நுழைந்த வட கொரிய படைவீரர்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

வட கொரியாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் எதிரி நாடான தென் கொரியாவுக்குள், இரு நாட்டையும் பிரிக்கும் அதிக பாதுகாப்பு அரண்களை கொண்டிருக்கும் ராணுவ பிரசன்னமற்ற பகுதியை கடந்து தஞ்சம் அடைந்துள்ளார்.

நண்பகல் வேளையில் அதிகளவில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட மற்றும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியைக் கடந்து இந்த ராணுவ வீரர் வந்ததாக தென் கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

இருந்தும், கண்ணி வெடிகளில் அகப்படாமல் மற்றும் தன் முன்னாள் சகாக்களால் சுடப்படாமல் எப்படி தப்பித்தார் என்பது இதுவரை தெரியவில்லை.

ஆண்டுதோறும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட கொரியர்கள் சிக்கிக் கொண்டால் கடுமையான தண்டனை அல்லது மரணம் நிச்சயம் என்ற நிலையிலும் உயிரை பணயம் வைத்து அடக்குமுறை நிறைந்த நாட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள்.

பெரும்பாலானவர்கள் குறைந்த பாதுகாப்பு உடைய சீன எல்லை வழியாக தப்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்