ஐ.நா: மத்திய ஆப்பிரிக்க குடியரசில் ஆயுதக் குழுக்கள் ஆக்கிரமித்துள்ள பள்ளிகளை விட்டு வெளியேற உத்தரவு

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் உள்ள ஆயுதக் குழுக்கள் ஆக்கிரமித்துள்ள பள்ளிகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் மறுத்தால் ஐ.நா. படையை பயன்படுத்தும் என்று ஐ.நா. வின் தூதரகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆயுதக் குழுக்கள் பள்ளிகளை ஆக்கிரமித்துள்ளதாள் 10,000 குழந்தைகள் கல்வியை தொடர முடியவில்லை. (கோப்புப்படம்)

தீவிரவாதக் குழுக்களை சேர்ந்தவர்கள் தங்களது தளங்களை பள்ளிகளில் அமைத்துள்ளதால், 10,000 குழந்தைகள் தங்களது கல்வியை தொடர முடியவில்லை என ஐ.நா. கூறியுள்ளது.

தொடரும் பாதுபாப்பின்மை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, இடப்பெயர்வு மற்றும் கட்டிடங்கள் அழிக்கப்படுவது போன்றவற்றால் வேறு பல குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலவில்லை.

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் மூன்றில் ஒரு பங்கு பள்ளிகள் தோட்டாக்களால் துளைக்கப்பட்டுள்ளன, தீ வைக்கப்பட்டுள்ளன, சூறையாடப்பட்டுள்ளன அல்லது ஆயுதக் குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஐ.நா. தெரிவித்துள்ளது.