சிரியாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்ததால் விடுவிப்பு

சிரியாவில் பிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த பெண் கடந்த அக்டோபர் மாதம் கடத்தப்பட்டார்; கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

புதன்கிழமையன்று அப்பெண்ணின் பெயரை வெளியிடாமல், அவரை பற்றி தெரிவித்த ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர், துருக்கியில் உள்ள எல்லையை அவர் பாதுகாப்பாக கடந்து சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணும் அவரின் குழந்தையும் தற்போதைய சூழலில் நலமாக இருப்பதாகவும், அவர் ஜெர்மன் தூதரக ஊழியர்களால் கவனித்துக் கொள்ளப்பட்டு வருகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் செய்திதாளான பில்ட், அந்த பெண் நிறுவனம் சாரா ஊடகவியலாளராகப் பணிபுரிந்தவர் என தெரிவித்துள்ளது.

அல் கெய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக் குழுவொன்றால் அவர் பிடித்து வைக்கப்பட்டிருந்தார் என்றும், அவரை விடுவிக்க ஐந்து மில்லியன் யூரோக்களை கேட்டிருந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்