அமெரிக்காவில் ரயில் விபத்து: 100க்கும் அதிகமானோர் படுகாயம்

அமெரிக்க மாநிலமான நியூ ஜெர்சியில் பயணிகள் ரயில் ஒன்று ரயில் நிலையத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption விபத்து பகுதி

நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதில் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறைந்தது ஒரு நபர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நியூயார்க்கிற்கு செல்லும் பயணிகளின் முக்கிய சந்திப்பாக உள்ள ஹோபக்கன் நகரின் ரெயில் நிலையத்தில் சில பயணிகள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

ரயில் நிலையத்திற்கும் ரயிலிற்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

உயிர் பிழைத்தவர்கள் அந்த ரயில் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக அதி வேகத்தில் சென்றதாக விவரித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்