அமெரிக்காவில் ரயில் விபத்து: 100க்கும் அதிகமானோர் காயம்

அமெரிக்கா, நியூ ஜெர்ஸி, ரயில் நிலையம் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹோபோக்கென் ரயில் நிலையம்

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்திலுள்ள ஹோபோக்கென் ரயில் நிலையத்தில், ரயில் வண்டி ஒன்று மோதியதில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என ஆரம்பகட்ட தகவல்கள் கூறுகின்றன. நூற்றுக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

இதன் காரணமாக ரயில் வண்டியின் பெட்டிகள், பயணச்சீட்டு தடுப்புகளையும் தாண்டி, வரவேற்பாளர்கள் பகுதிவரை சென்றுள்ளன.

இதையடுத்து ரயில் வண்டியின் பெட்டிகள், ரயில் நிலையம் ஆகியவற்றுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதை படங்கள் காட்டுகின்றன.

ரயில் நிலைய மேற்கூரையின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்து நடந்த ரயில் நிலையத்துக்கு இருபதுக்கும் அதிகமான அவசர உதவி வழங்கும் வாகனங்கள் வந்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுசென்றன என்று சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.