புகழ் பெற்ற டச்சு ஓவியரின் திருடு போன இரு ஓவியங்கள் மீட்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோ

இத்தாலியின் தென் நகரமான நேப்பில்ஸில், டச்சு ஓவியர் வின்சென்ட் வான் கோவின் திருடுபோன இரு ஓவியங்களை போலிசார் மீட்டுள்ளனர்.

2002 ஆம் அண்டில் ஆம்ஸ்டெர்டேமிலிருந்த அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து இந்த ஓவியங்கள் திருடுபோயின.

இந்த ஓவியங்கள் விலைமதிப்பற்றவை என சொல்லப்பட்டன.

`நியுநென்னில் சீரமைக்கப்பட்ட திருச்சபையிலிருந்து பிரார்த்தனையை முடித்துவிட்டு பிரார்த்தனையாளர்கள் வெளிவருவது` மற்றும் `ஷ்வெனிங்கனில் உள்ள கடற்கரைக் காட்சி` ஆகிய இரண்டு ஓவியங்களும் வான் கோவின் ஆரம்ப கால ஓவியங்களைச் சேர்ந்தவையாகும்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முன்னர் திருடு போன வான் கோவின் ஓவியம்

ஓவியங்கள் திருடு போன விவகாரத்தில், அதில் ஈடுபட்ட குழுவிலிருந்து சில உறுப்பினர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் கம்மோரா குழுவினருக்கு எதிராக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்