தாய்லாந்து: ஸிக்கா வைரஸ் தொடர்புடைய பிறப்பு குறைபாடான சிறு தலையுடன் பிறந்திருக்கும் இரு குழந்தைகள்

ஸிக்கா வைரஸோடு தொடர்புடைய மைக்ரோகெஃபெலி எனப்படும், கடும் பிறப்பு குறைபாடான, சிறு தலையுடன் இரண்டு குழந்தைகள் பிறந்திருப்பதை தாய்லாந்தின் சுகாதார அமைச்சகம் உறுதி செய்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை European Photopress Agency
Image caption ஜனவரி மாதத்திலிருந்து இது வரை சுமார் 350 பேரை ஸிக்கா வைரஸ் தொற்றியிருப்பதாக தாய்லாந்து தெரிவித்திருக்கிறது

தென் கிழக்கு ஆசியாவில் இயல்புக்கு மாறாக சிறு தலையோடு முதல் முறையாக பிறந்திருக்கும் இரண்டு குழந்தைகள் இவை தான்.

கொசுக்களால் பரவுகின்ற இந்த வைரஸ் தொற்று காணப்படுவதை இந்த பிராந்தியத்திலுள்ள பல நாடுகள் அறிவித்துள்ளன.

ஸிக்கா வைரஸ் தொற்று பரவல் கடந்த ஆண்டு பிரேசிலில் இனம் காணப்பட்டது. தென் அமெரிக்காவையும் தாண்டி அது பரவியிருக்கிறது.