"இறப்பதற்காக கைவிடப்பட்டவர்கள்" - பெங்காசி நகரில் கவலை அதிகரிப்பு

லிபியாவின் பெங்காசி நகரில் போருக்கு மத்தியில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான பொது மக்கள் நிலை தொடர்பாக மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கவனத்தை ஈர்த்திருக்கிறது

Image caption "இறப்பதற்காக கைவிடப்பட்டவர்கள்" என்று அம்னெஸ்டியால் விவரிக்கப்படுகின்ற இந்த பொது மக்கள் பற்றிய கவலை அதிகரித்து வருகிறது

ராணுவ தலைவர் காலிஃபா காஃப்டாருக்கு விசுவாசமான படைப்பிரிவுகள் பல மாதங்களாக கான்ஃபௌடாவின் சுற்றுப்புறங்களிலுள்ள இஸ்லாமியவாத தீவிரவாதிகளை முற்றுகையிட்டுள்ளன.

ஆனால், தங்களை சுற்றி குண்டுகள் பொழியப்பட, குறைந்து வரும் அழுகிய உணவு மற்றும் அசுத்தமான குடிநீரை வைத்து வாழ்வதற்கு போராடுகிற நிலையில் நூற்றுக்கணக்கான குடும்பங்களும் இந்த முற்றுகையில் சிக்கி கொண்டுள்ளன.

"இறப்பதற்காக கைவிடப்பட்டவர்கள்" என்று அம்னெஸ்டியால் விவரிக்கப்படுகின்ற இந்த பொது மக்கள் தப்பிப்பதற்கான காலம் நிறைவைடைந்து வருவதாக அம்னெஸ்டி கூறியிருக்கிறது. .

தொடர்புடைய தலைப்புகள்