ஜிஹாதி குழுவை பாதுகாக்கும் அமெரிக்கா: ரஷ்யா அமைச்சர் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்

சிரியா அதிபர் அஸாத்தை பதவியிலிருந்து இறக்க சிரியா ஜிஹாதிகள் குழு உதவி தேவைப்படும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக்கொள்ள, அமெரிக்கா அந்தக் குழுவை விட்டு வைத்திருப்பதாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஆதரவு பெற்ற மிதவாத போராளி குழுக்களிடமிருந்து ஐ.எஸ் அமைப்பினர் மற்றும் பலம் பொருந்திய ஜப்ஹெத் பத்தே அல் ஷாம் (முன்னர் அல்-நூஸ்ரா முன்னணி என்றழைக்கப்பட்டவர்கள்) போன்ற குழுக்களை பிரித்து பார்ப்பதாக அளித்த உறுதிமொழியை அமெரிக்கா உடைத்துவிட்டதாக செர்கெய் லேவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவால் முடியவில்லை அல்லது செய்யத் தயாராக இல்லை என்றும், நூஸ்ரா முன்னணியை அமெரிக்கா அழிக்காமல் விட்டுவைக்க திட்டமிட்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ரஷ்யா வான்வழித்தாக்குதலை தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெற்றதை நினைவுகூரும் விதமாக நடைபெற்ற கூட்டத்தின் போது அமைச்சர் இவ்வாறு பேசினார்.