மெக்ஸிக்கோ: ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 படையினர் பலி

மெக்ஸிக்கோவின் வட மேற்கில் உள்ள சின்னலோவா மாகாணத்தில் நடைபெற்ற திடீர் தாக்குதலில் 4 படையினர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

படையினர் காயம் அடைந்த சந்தேக நபரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, குறைந்தது எட்டு வாகனங்களில் வந்த துப்பாக்கிதாரிகளால் தாக்குதலுக்கு உள்ளானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிச்சூட்டிற்கு பிறகு, படையினரின் வாகனத்தை அவர்கள் தீயிட்டு கொளுத்தி உள்ளார்.

அந்த சந்தேக நபரின் நிலைகுறித்த எந்த தெளிவான தகவல்களும் இல்லை.

தொடர்புடைய தலைப்புகள்