பாலியல் வல்லுறவு பற்றிய புதிய சட்டங்கள் கலிஃபோர்னிய ஆளுநரால் அங்கீகரிப்பு

பாலியல் வல்லுறவின் சட்டபூர்வ வரையறையை விரிவாக்கியும், இந்த குற்றத்திற்கான சிறை தண்டனையை கணிசமான அளவு அதிகரித்தும் இருக்கின்ற புதிய சட்டங்களை கலிஃபோர்னிய ஆளுநர் அங்கீகரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption சுயநினைவிழந்த பெண் மீது பாலியல் தாக்குதல் தொடுத்ததை இரண்டு சாட்சிகள் பார்த்திருந்தனர்

பல்கலைக்கழக விருந்து ஒன்றில் சுயநினைவிழந்த பெண்ணொருவர் மீது பாலியல் தாக்குதல் தொடுத்தவருக்கு ஆறுமாத சிறை தண்டனை கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்டதை அடுத்து, அமெரிக்கா முழுவதும் எழுந்த கண்டனக் குரல்களை தொடர்ந்து இந்த சட்டம் வந்துள்ளது.

தண்டனையின் பாதி காலத்தை முடித்த புரோக் டர்னர் என்ற அந்த மனிதர், நன்னடத்தை அடிப்படையில் செப்டம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption புரோக் டர்னர் மூன்று மாதங்களே தண்டனை அனுபவித்த நிலையில் நன்னடத்தை அடிப்படையில் செப்டம்பர் மாதம் விடுவிக்கப்பட்டார்

சுயநினைவிழந்தோர் மீது தொடுக்கப்படும் பாலியல் தாக்குதல்கள் இதுவரை கலிஃபோர்னியாவில் பாலியல் வல்லுறவின் கீழ் வகுக்கப்படாமல் இருப்பதால் நீதிபதி மிக குறைவான தண்டனையே வழங்கியிருந்தார்.

இந்த புதிய, கடுமையான சட்டங்கள் அடுத்த ஆண்டு நடைமுறையாக தொடங்கும்.

தொடர்புடைய தலைப்புகள்