சம்பளம் வழங்க தடுமாறும் தைவான் கோமிங்தாங் கட்சி

உலகிலேயே மிகவும் பணக்கார கட்சியாக ஒரு சமயம் கருதப்பட்ட தைவானின் அரசியல் கட்சி ஒன்று. அதனுடைய இரண்டு வங்கிக் கணக்குளை முடக்கிய பின்னர், செப்டம்பரில் தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதியம் வங்க முடியாமல் தடுமாறுகிறது.

படத்தின் காப்புரிமை AP

கோமிங்தாங் கட்சிக்கான செல்வத்தின் மூலம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட புலனாய்வின் ஒரு பகுதியாக இந்த வங்கிக் கணக்குள் முடக்கப்பட்டுள்ளன.

ஒரு சமயம் சீனா முழுவதையும் ஆண்டு வந்த இந்த கட்சியினர், மாசேதுங்கின் கம்யூனிஸ்டுகளோடு நடைபெற்ற உள்நாட்டு போரில் தோல்வியடைந்த பின்னர் தைவானுக்கு தப்பியோடி விட்டனர்.

நூறு டன்னுக்கு மேலான தங்கத்தோடு அவர்கள் தப்பியோடி விட்டதாக நம்பப்படுகிறது.

இந்த கட்சி நெறியற்ற முறையில் ஆதாயம் சேர்த்திருக்கிறதா என்பதை ஆராய கடந்த ஜூலை மாதம் தைவானில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்