கருக்கலைப்பு தொடர்பாக போலந்து அரசின் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

கருக்கலைப்புக்கு ஏறக்குறைய முற்றிலுமாக தடைவிதிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக போலந்தின் தலைநகரான வார்சாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கருக்கலைப்பு மறைமுகமாக நடைபெறுவதால் ஏற்படும் ஆபத்துக்களை அடையாளப்படுத்தும் விதமாக துணிகளை தொங்கவிடும் ஹேங்கர்களை அடையாளமாக காட்டும் கருக்கலைப்பை ஆதரிக்கும் செயற்பாட்டாளர்கள்

தாயின் உயிருக்கு ஆபத்து இருந்தால் மட்டுமே கருக்கலைப்புக்கு அனுமதிக்கும் சில பொதுமக்கள் முன்வைத்திருக்கும் யோசனை மீது பணிகளை தொடங்குவதற்கு போலந்து நாடாளுமன்றம் தீர்மானித்த ஒரு வாரத்திற்கு பிறகு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மிகவும் கட்டுப்படுத்தும் கருக்கலைப்பு சட்டங்களை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக போலந்து ஏற்கெனவே உள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption போலந்தில் கருக்கலைப்புக்கு விதிக்கப்படும் தடையை ஆதரிப்போர் இப்பழக்கத்தை கொடிய கொலை என்று அழைக்கின்றனர்

பெண்களின் உரிமைகளை மிக கடுமையாக பின் தள்ளுவதாக இருப்பதாக இந்த முன்மொழிவுகளை ஐரோப்பிய கவுன்சில் விவரித்திருக்கிறது.

இந்த திட்டங்களுக்கு எதிராக, தேசிய அளவிலான வேலைநிறுத்தம் ஒன்றை திங்கள்கிழமை அன்று பெண்கள் நடத்தவும் திட்டங்கள் உள்ளன.