சிரியாவில் பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்து பல வான் வழித் தாக்குதல்கள்

சிரியாவின் அலெப்போ நகரில் இரவு முழுவதும் நடந்த பீரங்கித் தாக்குதல்களைத் தொடர்ந்து பல வான் வழித் தாக்குதல்கள் நடந்தன என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை THAER MOHAMMED/AFP/Getty Images)

கிழக்கில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள பகுதி ஒன்றில் உள்ள ஒரு மருத்துவமனை பேரல் குண்டால் தாக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கூறுகிறது.

ஷெல் குண்டு தாக்குதலுக்கு பழைய நகரத்தை சிரிய அரச படைகள் இலக்கு வைத்தன என்றும் இரண்டு சுற்றுப்புறப் பகுதிகளில் வன்முறை மோதல்கள் நடந்தன என்றும் சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது