அலெப்போ: கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மருத்துவமனை செயலிழப்பு

சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களால், அங்குள்ள முக்கிய மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முற்றிலுமாக நின்றுவிட்டன என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இடிபாடுகளில் எஞ்சியுள்ள மருத்துவமனை கட்டடத்தின் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்துள்ளதாகவும், அங்கு பணியாளர்களும் காவலர்களும் இல்லை எனவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சிறிது காலத்திற்கு அமலில் இருந்த போர் நிறுத்தம் தடுமாற்றத்தில் முடிந்ததையடுத்து, அலெப்போவின் கிழக்கில், முற்றுகையிடப்பட்ட பகுதியில் சிரியா மற்றும் ரஷிய விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தின.

அதில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர் மேலும் பலர் காயமடைந்தனர்.

சிரியாவில் நடந்து வரும் வான் தாக்குதல்களை நிறுத்த அதில் தலையிடுமாறு ஐ.நாவை வளைகுடா நாடுகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்