எல் சால்வடோரில் நிகழ்ந்த எல் மொசொட்டே படுகொலைகளை மீண்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவு

எல் சால்வடோர் உள்நாட்டு போரிலே மிகவும் மோசமான போர் என்று கருதப்பட்ட 1981ல் நடந்த எல் மொசோட்டே படுகொலைகள் தொடர்பான விசாரணையை அந்நாட்டு நீதிபதி ஒருவர் மீண்டும் தொடங்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption எல் மொசொட்டே படுகொலைகள் நினைவுச்சின்னம்

இந்த படுகொலைகள் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான தங்கள் கோரிக்கையை ஏற்று கொண்டதாக மூன்று மனித உரிமைகள் குழுக்கள் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, மோதல் ஏற்பட்ட காலத்தில் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது பொது மன்னிப்பு தவறு என்று தீர்ப்பளித்துள்ளது.

எல் மசோட்டே என்ற கிராமத்தில் ராணுவ பட்டாலியன் ஒன்று, குறைந்தது 500 பேரை கொன்றது. அதில், பெரும்பாலனவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். நான்கு ஆண்டுகளுக்குமுன், எல் சால்வடோர் அரசாங்கம் இந்த படுகொலைகளுக்காக அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியது.

1979 ஆண்டிலிருந்து 1992 வரை எல் சால்வடோரில் நிகழ்ந்த உள் நாட்டு போரில் 75,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய தலைப்புகள்