சான் டியாகோ துப்பாக்கிச்சூடு: உள்ளூர் போலிஸ் தலைவர் பதவி விலக கோரிக்கை

அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் கடந்த செவ்வாய் அன்று சுட்டுக் கொல்லப்பட்ட நிராயுதபாணியான கருப்பின நபரின் தந்தை, உள்ளூர் காவல்துறை தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சான் டியாகோ துப்பாக்கிச்சூடு: உள்ளூர் போலிஸ் தலைவர் பதவி விலக கோரிக்கை

தொடர்ந்து, ஐந்தாவது நாளாக நடந்துவரும் போராட்டத்தில், நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பேசிய ரிச்சர்ட் ஒலாங்கோ அபுகா, ஆஃப்ரிக்க அமெரிக்க சந்தேக நபர்களை போலிஸ் கையாளும் விதத்திற்கு தன்னுடைய மகனின் மரணம் ஒரு திருப்பு முனையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆல்ஃபிரட் ஒலாங்கோ

உகாண்டாவை சேர்ந்த அகதியான ஆல்ஃபிரட் ஒலாங்கோ எல் கஜோனின் புறநகர் பகுதியில் சுட்டு கொல்லப்பட்டார்.

அந்த நபர் ஒழுங்கற்ற வகையில் நடந்து கொண்டதாக போலிஸ் தெரிவித்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட நபருக்கு மனச்சிதைவு பிரச்சனை இருந்தது என்றும், சுடப்படுவதை விட அவருக்கு உதவி தான் தேவைப்பட்டது என்றும் அவரின் தாய் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய தலைப்புகள்