மத்திய எத்தியோப்பியாவில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழப்பு

மத்திய எத்தியோப்பியாவில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மேலும் அமைதியின்மை சூழல் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பிஷோஃப்டூ நகரில் உள்ள ஓரோமியா பகுதியில் நடைபெற்ற மத பண்டிகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து, உரை நிகழ்த்தப்பட்ட போது இடையூறு செய்தனர். தொடர்ந்து, போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் எச்சரிக்கை விடும் வகையில் துப்பாக்கி குண்டுகளை சுட்டனர்.

போலிஸின் இந்த நடவடிக்கை கூட்ட நெரிசலை உருவாக்கியது.

அதில் பலர் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓரோமியா பகுதி மற்றும் அதன் அண்டை மாகாணமான அம்ஹாராவில் பல மாதங்களாக பயங்கர மோதல்களை ஏற்பட்டுள்ளன.

இந்த மோதல்களில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய அரசால் அதிகரித்து வரும் அளவில் நடத்தப்படுவதாக கூறப்படும் அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை உள்ளூர் சமூகங்கள் அதிகரித்து வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்